மக்களுக்கு மேலும் சுமையாகிவிட்டது எண்ணெய் மீதான வரி!

எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

ஒருபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறம், எரிபொருளுக்கு சிறிய அளவிலான நிவாரணம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, எண்ணெய் மீதான வரியையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

கப்பலில் இருந்து இறக்கப்படும் எரிபொருளின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், தரகுக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

இந்நிலையில், குறைந்தபட்சம் எரிபொருள் மீதான வரியையாவது அரசாங்கம் குறைக்க வேண்டும். எரிபொருள் மீதான வரியை ஓரளவிற்கேனும் குறைப்பதே நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கையாகும். அதுவே மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகவும் இருந்தது.

ஆனால், தற்போதுள்ள வரி அளவைவிட அதிகமான வரியை எரிபொருள் மீது விதித்துள்ளதால், அதன் இறுதிச் சுமை பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.

பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் உயர்த்தியுள்ளன. அதேவேளை, மக்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை.

அரசாங்க அமைச்சர்களின் கருத்துப்படி, தற்போது எரிவாயு வரிசைகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. ஆனால், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று பார்த்தால், மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் தொடர்பில் தொடர்ந்து பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், இதற்கான அரசாங்கத்தின் தீர்வு என்ன? மீண்டும் புதிய வரிகளை விதிப்பதா? அல்லது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி விசாரணைகளை முன்னெடுப்பதா? மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது?

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தற்போது அந்த நடவடிக்கைகள் பொதுமக்களையும் பாதிக்கும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

nama

மக்களுக்கு மேலும் சுமையாகிவிட்டது எண்ணெய் மீதான வரி!

November 9, 2026

எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை

ecb

இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு?

November 9, 2026

இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து

eg

எகிப்தில் இரு ரயில் விபத்து; 7 பேர் பலி

November 9, 2026

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும்

rain

இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

November 9, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

court-judge-hammer-gavel-696x398

லண்டனில் பணமோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தம்பதிக்குக் கடும் தண்டனை!

November 9, 2026

UK-ல் உள்ள Bushey பகுதியில் £200,000-க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட மகேந்திரா சர்வேந்திரா மற்றும் அவரது மனைவி மிர்ணாலினி சர்வேந்திரா

na

நளின் எடுத்து வந்த ட்ரோன்கள் பறிமுதல்!

November 9, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள்

sa

சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை!

November 8, 2026

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி

strike

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

November 8, 2026

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

ja

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள்!

November 8, 2026

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக

so4

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை

November 8, 2026

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள்

ss

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்? கனடாவில் 71 வயதை எட்டியதும் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகுமா? இதற்கான புதிய திட்டத்தை கனடா மத்திய அரசு தனது 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளது. ‘RRSP for Life’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஓய்வூதியச் சேமிப்பை நிர்வகிக்கும் முறையில் முக்கியமான மாற்றம் ஏற்படலாம். தற்போதைய விதிகளின்படி, கனடாவில் ஒருவர் 71 வயதை அடையும் ஆண்டின் இறுதிக்குள் தனது RRSP சேமிப்புக் கணக்கை RRIF எனப்படும் ஓய்வூதிய வருமானக் கணக்காக மாற்ற வேண்டும். இல்லையெனில் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய வரிகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். புதிய முன்மொழிவு இந்தக் கட்டாயக் கணக்கு மாற்றத்தை நீக்க முயற்சிக்கிறது. அதாவது, 71 வயதைக் கடந்த பின்னரும் ஒருவர் தனது RRSP கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். கணக்கின் உரிமையாளர் உயிரிழந்தால், அவருடைய கணவன், மனைவி அல்லது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட துணைவர் அந்தக் கணக்கின் அடுத்தடுத்த உரிமையாளராகத் தொடரும் வசதியையும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஓய்வூதியச் சேமிப்பை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றும் நடைமுறை எளிதாகலாம். * 71 வயதுக்குப் பிறகும் குறைந்தபட்ச வருடாந்தப் பணம் பெறும் கட்டாயம் தொடரும். * 71 வயதுக்குப் பிறகு புதிய RRSP பங்களிப்புகளைச் செய்ய முடியாது. * இந்த மாற்றங்கள் இன்னும் சட்டமாகவில்லை. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிர்வாகச் சிக்கல்கள் குறையும் என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சிரமப்படும் முதியோருக்கு இந்த மாற்றம் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

November 8, 2026

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்? கனடாவில் 71 வயதை எட்டியதும் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகுமா?

7

“அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்!” – அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்!

November 8, 2026

“‘சென்னை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக்