மக்களுக்கு மேலும் சுமையாகிவிட்டது எண்ணெய் மீதான வரி!

எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ஒருபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறம், எரிபொருளுக்கு சிறிய அளவிலான நிவாரணம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அதன் விலை […]
இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு?

இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரானது, ஆஸ்திரேலியாவில் […]
எகிப்தில் இரு ரயில் விபத்து; 7 பேர் பலி

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில், பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து விசாரணை நடத்துமாறும், அலட்சியமாக இருந்தவர்கள் மீது […]
இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் இன்று (9) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான […]
லண்டனில் பணமோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தம்பதிக்குக் கடும் தண்டனை!

UK-ல் உள்ள Bushey பகுதியில் £200,000-க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட மகேந்திரா சர்வேந்திரா மற்றும் அவரது மனைவி மிர்ணாலினி சர்வேந்திரா ஆகியோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் மகேந்திரா சர்வேந்திரா தன்னிடம் வந்த the victims-ஐ நம்பவைத்து remortgage ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி £230,000 வரை ஏமாற்றியுள்ளார். அந்தப் பணத்தை ஒரு shop மற்றும் IT business உள்ளிட்ட தொழில்களில் invest செய்வதாகக் கூறிவிட்டு, எங்குமே முதலீடு செய்யாமல் தனது சொந்த […]
நளின் எடுத்து வந்த ட்ரோன்கள் பறிமுதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று (8) பறிமுதல் செய்துள்ளனர். குறித்த ட்ரோன்களை விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்வதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் (ICL), தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (MoD) அனுமதி என்பன அவசியமாக இருந்தபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர் அந்த அனுமதிகளை சமர்ப்பிக்கத் […]