பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க முடியாது. பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என ஸ்ரீபோதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகரும், எம்பிலிபிட்டிய இங்குரஆர ஸ்ரீபோதிராஜ பிக்கு பயிற்சி மையத்தின் ஆன்மீகப் பணிப்பாளருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் சுமந்துதான் இவ்வுலகத்துக்கு வருகிறான். ஆனால், பிக்கு ஒரு நிலைப்பாட்டில் அந்த அனைத்து உரிமைகளையும் தியாகம் செய்துவிட்டுத்தான் சாசனக் கோட்பாட்டுக்குள்ளே நுழைகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் தனக்கிருந்த மனித உரிமைகளை நிராகரித்துவிட்டுத்தான் அவர் துறவறத்தை ஏற்கிறார்.

அவ்வாறு துறவறம் பூணும் ஒரு பிக்கு, அன்று முதல் மூன்று விதமான சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படுகிறார். முதலாவது, விநய பிடகத்தில் புத்த பெருமானால் விதிக்கப்பட்டுள்ள பிராதிமோட்ச விதிகள். இரண்டாவது, நாட்டின் இராஜ நீதி எனப்படும் அரச சட்டம். தான் ஒரு பிக்கு என்பதற்காக நாட்டின் சட்டத்திலிருந்து விலகிவிட முடியாது. பிக்குகள் அரச சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்ம நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது, சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விதிகள். இந்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் பிக்குகள் அடிபணிய வேண்டும்.

மனித உரிமைகளை நிராகரித்துவிட்டு துறவறத்துக்குள் நுழைந்த பிக்குவுக்கு இருப்பது சாதாரண மனித உரிமைகள் அல்ல, அது விடுதலை குறித்த உன்னதமான உரிமையாகும். தர்மத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாத ஒருவருக்கு, எந்த நேரத்திலும் துறவிக்கோலத்தை நீக்கிவிட்டுச் செல்லும் சுதந்திரம் உண்டு. ஏனைய மத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பௌத்த பிக்குவுக்கு இருக்கும் விசேட வரப்பிரசாதம் இதுவாகும். எனவே தனது ஆடையைக் களைந்து இல்லறத்துக்குத் திரும்புவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது.

பிக்குவானவர் தனக்கு விருப்பமானதைச் செய்துகொண்டு காவி உடையில் தங்கியிருக்க மனித உரிமைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் தான் சுயமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டே வாழ வேண்டும். வரலாற்றில் தர்ம சங்காயனைகளின் போது, தர்மத்தைப் பாதுகாப்பதற்காகத் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டனர். தர்மசோக மன்னன், வோஹாரிக திஸ்ஸ மன்னன் மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னன் போன்றோரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சாசனச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இவ்வாறான நடைமுறைகள் சரியாகச் செயற்படாத காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அரசாங்கம் தலையிட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையுடன் சாசனச் சீர்திருத்தங்களை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். அதுவே சாசனத்தின் அசிவிருத்திக்கு வழியாகும். மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, தமக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டு துறவற ஆடையில் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாதவர்கள் கௌரவமாக அதனை நீக்கிவிட்டு சாதாரண இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதை விடுத்து, மனித உரிமைக் கதைகளைக் கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது சாசனத்தின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த