போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை; 44,806 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 44,806 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்குடனும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும் இந்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 221 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 14,761 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 223 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக 16,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 108 கிலோ கிராம் குஷ், 81 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 8,34,000 அதிகமான போதை மாத்திரைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய அளவிலான முழுநாடும் ஒன்றாக என்னும் விசேட நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 1 இலட்சத்து 3ஆயிரம் 899 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் உபயோகம் மற்றும் வர்த்தகத்துன் தொடர்புடையவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,419 கிலோ கிராம் ஐஸ் , 526 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 3,898 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

 

மேலும் விமான நிலையம் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 199 கிலோ கிராம் குஷ் மற்றும் 123 கிலோ கிராம் அசிஷ், 9,41,245 போதை மாத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர்களில் 146 பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,018 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது 1,669 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3,096 பேர் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு விசேட போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் இன்னும் பாரிய அளவிலான சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்