ந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வழியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் பறக்கவிடப்பட்ட இலகுரக பாராசூட் (Paramotor) இயந்திரம் ஒன்று, அதனை இயக்கியவர் மற்றும் அதில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுடன் இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் அந்த வெளிநாட்டு பெண் உயிரிழந்துள்ளதுடன், பாராசூட்டை இயக்கிய கொலம்பியாவைச் சேர்ந்த நபர் உயிர்தப்பியுள்ளார். உயிரிழந்தவர் 31 வயதான பலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.