பிள்ளையான் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகள் குறித்து சாணக்கியன் கருத்து

பிள்ளையான் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகள் – இன்றைய விசேட கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் சாணக்கியன்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேனதுரை சந்திரகாந்தன் பிள்ளையானால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மாவட்டச் செயலாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் காணி நிர்வாகம், காணி உரிமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி ஆவணப்படுத்தல், காணி அனுமதிகள், அரச காணி நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைசார் தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் ஒரே தன்மையுடையவை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினேன். அவை பொதுவாக மூன்று வகைகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடைய நுணுக்கமான விடயங்களாக இருப்பதால், அவற்றிற்கு ஒரே கூட்டத்தில் உடனடி தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதையும் காணி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்வாங்கி விரிவான அறிக்கையொன்றை தயாரித்து சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் அறிவுறுத்தியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்கள் மட்டுமல்லாது, மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கட்டாயம் உள்வாங்க வேண்டும் என நான் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தேன். மக்களின் உண்மையான பிரச்சினைகளும், அவர்களின் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்க வேண்டுமெனில், ஜனநாயக பிரதிநிதிகளின் கருத்துக்களும் அவசியம் பதிவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
மேலும், தனியார் காணிகள் தொடர்பான விவாதத்தின் போது, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் உள்ள புளுட்டுமான் ஓடை பகுதியில் பல ஏக்கர் தனியார் காணிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் எடுத்துரைத்தேன். இவ்வளவு காலமாக இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதமை குறித்து எனது கடும் கவலையையும் பதிவு செய்தேன்.
இதனைத் தொடர்ந்து, குறித்த காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதேபோல், திராய்மடு பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணி தொடர்பாக, அதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் தெரிவித்தார். அந்த விடயம் தொடர்பான விரிவான அறிக்கையையும் தாமதமின்றி சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் பணிப்புரை வழங்கினார்.
அரச காணிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச காணிகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறான அனைத்து காணிகளையும் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேச்சல் தரை நிலங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றின் தற்போதைய நிலை, பயன்பாடு மற்றும் எதிர்கால முகாமைத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்று கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் தொடர்பான விரிவான அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மக்களின் காணி உரிமைகளை பாதுகாப்பதும், சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சட்டம் சமமாக அமுல் படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதும், வெளிப்படையானதும் நீதியானதுமான காணி நிர்வாகத்தை உருவாக்குவதும் எனது தொடர்ச்சியான பொறுப்பாகும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நியாயமான காணி உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை, இந்தப் போராட்டத்தை அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வழிகளிலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்.
gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்