பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ‘மனதை திருடிவிட்டாய்’, ‘எங்கள் அண்ணா’ போன்ற படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து இருவரும் ஒன்றிணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கியுள்ளார். ஸோம்பி கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஒரு கற்பனையான உலகத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. டீஸரில், பிரபுதேவா அதிரடி ஆக்ஷன் அவதாரத்திலும், வடிவேலு ஆதிவாசி தோற்றத்திலும் தோன்றுகின்றனர். இருவருக்கும் இடையிலான காம்பினேஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் டீஸரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.