வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலின் பாதுகாப்பு ஓட்டைகள் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. பொதுமக்களுடனான நேரடித் தொடர்பு:
ஜனாதிபதிர் மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்துகொண்ட அந்த ஹோட்டலின் வரவேற்பு அறையில் (Lobby), சாதாரண ஹோட்டல் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டும் மதுஅருந்திக்கொண்டும் இருந்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெறும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்ததாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2. அடையாளச் சோதனையில் அலட்சியம்:
-
ஹோட்டல் நுழைவாயிலில் அழைப்பிதழ்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை.
-
நுழைவுச் சீட்டுகளில் (Tickets) பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, மேசை எண்கள் மட்டுமே இருந்தன.
-
நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த எவ்வித அடையாள அட்டையும் (ID) கேட்கப்படவில்லை.
3. மெட்டல் டிடெக்டர் சோதனையில் குளறுபடி:
விருந்து மண்டபத்திற்கு சற்று முன்னதாக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மெட்டல் டிடெக்டர் (Metal Detector) சோதனை நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததும் அந்தப் பகுதியிலேயே ஆகும்.
-
அங்கு பாதுகாப்புச் சோதனை முறையாக நடத்தப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
-
உதாரணமாக, ஒரு விருந்தினரின் பையில் இருந்த ‘வேப்பிங்’ (Vaping device) கருவி காரணமாக மெட்டல் டிடெக்டர் சத்தமிட்டபோது, அவர் அளித்த விளக்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு மேலதிக சோதனையின்றி உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4. ஹோட்டல் விருந்தினராக ஊடுருவல்:
சந்தேக நபர் அந்த ஹோட்டலிலேயே ஒரு விருந்தினராகத் தங்கியிருந்தமை பாதுகாப்புத் துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. பிற்பகல் 2:00 மணி முதல் ஹோட்டல் மூடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே தங்கியிருந்த விருந்தினர்கள் மூலம் ஆபத்து ஏற்படலாம் என்பதைப் பாதுகாப்புப் படையினர் முன்கூட்டியே கணிக்கவில்லை என்பது புலனாகிறது.
இந்தத் தகவல்கள் அனைத்தும், உலகின் மிக உயர்ந்த பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய ஜனாதிபதியின் பாதுகாப்பில் இருந்த பாரிய ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன