விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தன்னாவுக்கு நாளை காலை மற்றும் மாலை என்று இரண்டு முறை திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
வேறு வேறு மாநிலங்களை சேர்ந்த விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் நாளை இரண்டு முறை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் தேவரகொண்டாவுக்கும், கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தன்னாவுக்கும் நாளை திருமணம் நடக்கவிருக்கிறது. நாளை காலை விஜய் தேவரகொண்டா குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்கிறதாம். அதாவது தெலுங்கு முறைப்படி திருமணம் நடக்கும்.
இதையடுத்து மாலையில் கொடகு மக்களின் முறைப்படி மீண்டும் ஒரு முறை திருமணம் நடத்துகிறார்களாம். இரண்டு பேரின் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவே இப்படி இரண்டு முறை திருமணம் நடக்கிறது.