பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.
இது தொடர்பான மேலதிகப் புலனாய்வு விசாரணைகளின் தற்போதைய முன்னேற்ற அறிக்கையை அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.