வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் மு. நந்தகோபாலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைத்தார்.
முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 130 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பெண் தொழில்முயற்சியாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர். அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடு வளர்ப்புக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன், க்ளின் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம. மோகன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.