நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராசா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், களஞ்சியசாலையில் இருந்த 60 வீதத்துக்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ச. சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சிய அறையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தீயில் சேதமடைந்த பகுதிகளை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.

அவ்வேளை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மருந்து களஞ்சியசாலையில் புற்றுநோய்க்கான மருந்துகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பெறுமதியான மருந்துகள் பல பாதுகாக்கப்பட்டிருந்தன. தீ விபத்தினால் அதில் சுமார் 60 வீதமானவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தற்போது வைத்தியசாலையின் அவசர தேவைக்கான மருந்துகள், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் காணப்படுகின்றன. அவற்றினை விட மேலதிகமாக மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் மற்றும் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளிலும் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனூடாக எதிர்வரும் சில தினங்களுக்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வருவோர் ஆகியோருக்கு மருந்துகளை விநியோகிக்க முடியும். அதற்கு இடையில் கொழும்பில் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரும் நடத்தவுள்ளனர்.

அவர்கள் கொழும்பில் இருந்து திங்கட்கிழமையே வைத்தியசாலைக்கு நேரில் வந்து விசாரணை செய்வார்கள். அதுவரை, களஞ்சியசாலை பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதுடன், தீயில் எரிந்த மருந்துகளையும் பாதுகாப்பாக வைத்திருந்து, விசாரணைகளின் பின்னரே அவற்றினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,