நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராசா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், களஞ்சியசாலையில் இருந்த 60 வீதத்துக்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ச. சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சிய அறையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தீயில் சேதமடைந்த பகுதிகளை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராசா நேரில் சென்று […]
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக சிங்கள விவசாயிகளின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் சூழ்ச்சிகளினாலும், பொய்களினாலும் ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டை ஒரு தேசமாக முன்னோக்கி நகர்த்த வேண்டுமானால், உண்மையான தேசப்பற்றுள்ள ஒரு தலைமைத்துவம் அவசியமாகும். அந்த வகையில், திலித் ஜயவீரவே எதிர்காலத்தில் இந்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தகுதியுள்ள ஒரே தலைவர் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை எல்லைப்பகுதியான தொப்பிகல, திவலபத்தான பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள விவசாயிகள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராகத் […]
இலங்கை அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை – நாமல்

அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் தேவையான முறையில் வாக்குமூலங்களை வழங்குமாறு கோரி, விசாரணை நிறுவனங்களால் சாட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். றாகமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். […]
பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 193-ஆக உயர்ந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பீடம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு பசிபிக் பிராந்தியத்தில் “அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதையில்” பயணித்த ஒரு படகை […]
“தவெக RSS-ன் பிள்ளைகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!” – ஆதரவு அளித்த கையோடு திருமாவளவன் அதிரடி அட்டாக்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை வழங்கிய நிலையில், அக்கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்த தனது விமர்சனத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “தவெக என்பது ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பிள்ளைகள் தான்” என்ற தனது பழைய விமர்சனத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத சூழலில், ஆளுநர் […]
நாளை பிற்பகல் 3 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்! ஆளுநரிடம் முறைப்படி உரிமை கோரினார்!

தமிழக அரசியலில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறிக்கு இன்று இரவு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். முன்னதாக, ஆளுநரின் கேரளப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு விஜய் சென்றார். அவருடன் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் […]
பலத்த மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) இரவு 11.30 மணி வரை இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இடியுடன் […]
2026: இதுவரை இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 904,855 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். அவர்களின் எண்ணிக்கை 200,796 ஆகும். அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் […]
மின் கட்டண அதிகரிப்பானது அரசின் கப்பம் – சஜித்

மின் கட்டண அதிகரிப்பானது அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இன்று (9) விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வரும்வேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இதில் கலந்து கொண்டு, தரமற்ற நிலக்கரி ஊழலின் சுமையை இந்நாட்டு மின்சார பாவனையாளர்கள் மீது சுமத்த வேண்டாம் என்று கோரிக்கைகளை முன்வைத்தது. […]
முதியவரை ஏமாற்றி வங்கிக் கார்டு மற்றும் கைபேசியைப் பறித்த மோசடி: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி முதியவர் ஒருவரிடம் இருந்து வங்கி அட்டைகள் மற்றும் கைபேசியைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: கடந்த பிப்ரவரி 12, 2026 அன்று, பாதிக்கப்பட்ட முதியவருக்கு பெண் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தான் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி அந்தப் பெண், முதியவரின் வங்கி அட்டைகளின் பாதுகாப்புத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (Compromised), அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]