தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளின் போதே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்டு பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு தவிசாளர் ஆகியோர் மறுநாள் யாழ் . போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பொலிஸாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வலி. கிழக்கு தவிசாளர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், இன்றைய தினம்(03.03.2026) புதன்கிழமை முறைப்பாட்டாளரையும், எதிராளியான பொலிஸாரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த விசாரணைகள் தொடர்பில் வலி. கிழக்கு தவிசாளர் தெரிவிக்கையில்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எம் மீது பொலிஸார் சித்திரவதைகளை புரிந்து உடல்உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தி எம்மை கைது செய்தனர்.

நடந்தவற்றை முற்றாக மாற்றிக் கூறிய பொலிஸார் அரசாங்கத்தின் திட்டமிட்ட அறிவுறுத்தலின் பிரகாரமே பொலிஸார் எம்முடன் அவ்வாறு நடந்து கொண்டனர் என வலுவான சந்தேகம் எமக்கு உண்டு.

இன்றைய விசாரணைகளின் போது, விகாரைக்கு சிங்கள மக்களும் வருகை தந்தமையால் , போராட்டகாரர்களுக்கும் , சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாது தடுக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தோம். அவர்களை கைது செய்யும் போது குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டோம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் எம்மை தேடி தேடி கைது செய்ததுடன் , பொலிசாரின் தடைக்கு அப்பால் எம்மை இழுத்து சென்று எம் மீது தாக்குதல் மேற்கொண்டே வாகனத்தில் ஏற்றினார்கள் என விடயத்தினையும் விசாரணைகளில் நான் தெரியபடுத்தினேன்.

எம் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள் , சாட்சியங்கள், அறிக்கைகள் என்பவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் கொழும்பு அலுவலகத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக தாம் அனுப்பி வைப்போம் என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார் என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை