சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவக் கட்சிகளும் ரகசியமாகக் கைகோர்க்க முயல்வதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண் ராஜ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கும், மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானது என அவர் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அருண் ராஜ், “தமிழக மக்கள் இந்த அரசியல் கூத்துகளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஏன் ஓபிஎஸ்-ஐ வெளியேற்றினார், இப்போது ஏன் இத்தகைய ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய திமுக-வும் அதிமுக-வும் இணைந்து எடுக்கும் முயற்சிகள் முற்றிலும் மக்கள் விருப்பத்திற்கு மாறானவை. வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள், தாங்கள் இவர்களுக்கா வாக்களித்தோம் எனச் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சதித் திட்டங்களுக்குத் தமிழக மக்கள் கண்டிப்பாகத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்; இறுதியில் நீதிதான் வெல்லும்” எனத் தெரிவித்தார். விஜய்யைப் பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், விசிக மற்றும் இடதுசாரிகளின் கண்டனங்கள் தவெக-விற்குப் பலம் சேர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
#ArunRaj #TVK #Vijay #DMK_ADMK_Alliance #BreakingNews #May8 #TamilNaduPolitics #PoliticalConspiracy #ThalapathyVijay #VijayAsCM #JusticeWillPrevail #MajorityTest #Stalin #EPS #ElectionResults2026 #NewGovernmentTN #DemocraticCrisis #AssemblyUpdate #TamilNews #VijayMakkalIyakkam_“`