தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பிணையில் விடுதலை

தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவரும், சர்ச்சைக்குரிய தலைவருமான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று (11) திங்கட்கிழமை பாங்கொக் க்ளோங் பிரேம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், 08 மாதங்கள் தண்டனையை அனுபவித்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தக்சின் விடுதலையாவதைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் திரண்டிருந்ததோடு, வெள்ளை நிற போலோ சட்டை மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்து சிறையிலிருந்து வெளியே வந்த தக்சினை, அவரது மகளும் முன்னாள் பிரதமருமான பெடோங்டார்ன் ஷினவத்ரா உள்ளிட்ட குடும்பத்தினர் கட்டித்தழுவி வரவேற்றுள்ளனர்.

ஆதரவாளர்கள் “நாங்கள் தட்சினை நேசிக்கிறோம்” என முழக்கமிட்டு அவருக்கு சிவப்பு ரோஜாக்களை வழங்கித் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, ஊடகவியலாளர்களிடம் எதுவும் பேசாமல் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தொலைத்தொடர்புத் துறை தொழில் அதிபர் தக்சின், 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராகப் பணியாற்றினார். ஏழை மக்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், 2006-ல் இராணுவப் புரட்சி மூலம் பதவியிறக்கப்பட்டார்.

அதன் பின்னர் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க நீண்ட காலம் வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவர், 2023-ல் மீண்டும் தாய்லாந்து திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மன்னர் மஹா வஜிராலோங்கோர்ன் அதனை ஒரு ஆண்டாகக் குறைத்தார். தக்சினின் வயது, சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் மீண்டும் குற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அவருக்கு பரோல் வழங்க நீதி அமைச்சு தீர்மானித்தது.

விடுதலையான போதிலும், அவர் தனது கையில் மின்னணு கண்காணிப்பு வளையல் அணிய வேண்டும். பாங்கொக்கில் உள்ள அவரது இல்லத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவ்வப்போது நன்னடத்தை அதிகாரிகளிடம் முன்னிலையாகி அறிக்கை அளிக்க வேண்டும் என அடுத்த நான்கு மாதங்களுக்குக் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தக்சினின் மகள் பெடோங்டார்ன் 2024-ல் நாட்டின் இளம் பிரதமராகப் பதவியேற்ற போதிலும், 2025 ஆகஸ்டில் நீதிமன்ற உத்தரவுப்படி பதவியிறக்கப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தட்சினின் ‘பியூ தாய்’ கட்சி மூன்றாம் இடத்தையே பிடித்திருந்த நிலையில், அவரது இந்த விடுதலை தாய்லாந்து அரசியலில் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்