தமிழீழ விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாடுமுழுவதும் நினைவுகூரப்படுவதை ஜனாதிபதி தடுக்க வேண்டும் – உதய கம்மன்பில

இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றும் உரையில், பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் குறித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை அவர் வழங்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே கௌரவம் செலுத்த ஜனாதிபதிக்குத் தேவைப்பாடு இருக்குமாயின், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரை முன்னிறுத்தி பிரிவினைவாதிகளைத் திருத்தியமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ வீரர்களின் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவே இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சமுகமளிப்பதற்கு முன்னர், பொய்க் குற்றச்சாட்டுகள் என மிக நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுவிட்டு இந்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு வந்திருந்தால், அதுவே நீங்கள் உண்மையாகவே இராணுவ வீரர்களை நினைவுகூருவதாக அமைந்திருக்கும்.

வடகிழக்கு எங்கும் நேற்றைய தினம் விடுதலைப் புலிகளின் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டதை நாம் கண்டோம். அன்று வடகிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புலிகளின் நினைவேந்தல்கள், இன்று இலங்கை முழுவதிலும் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன. இவ்வாறான பலவீனமான, முதுகெலும்பற்ற ஒரு தலைவரின் கீழ் மாத்திரமே ஒரு நாட்டுக்குள் பயங்கரவாதிகளைப் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூர முடியும்.

அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட, மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நாசி கட்சியின் தலைவர் ஹிட்லரையோ அல்லது நாசி கட்சியையோ நினைவுகூருவதற்கு இன்றைய ஜெர்மனியில் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று, நவீன உலக வரலாற்றின் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளை அமெரிக்காவில் நினைவுகூருவதற்கு அங்கு இடமளிப்பதில்லை.

நினைவேந்தல்கள் ஒருபுறமிருக்க, உலக வர்த்தக மையத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிரவுண்ட் ஜீரோ எனப்படும் பகுதிக்கு அருகாமையில் ஒரு பள்ளிவாசல் கூட அமைப்பதற்கு அங்கு இடமளிப்பதில்லை. அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவுபடுத்துவதன் மூலம் மக்கள் கொதித்தெழுவார்கள் என்ற அடிப்படையற்ற வாதத்தைப் பயன்படுத்தி, உலக நாடுகள் பயங்கரவாதத்தை இவ்வாறுதான் நிராகரிக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த உலகிலேயே இலங்கையில் மாத்திரமே பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முள்ளிவாய்க்காலில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாடும் புலிகளின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுதான் இந்த நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் புலிக்கொடிகளை ஏந்தி அவர்கள் நினைவுகூரும் போது, அந்தப் புலிகளால் தமது உயிர்களை இழந்த, கை கால்களை இழந்த எமது நாட்டு இராணுவ வீரர்களையும் ஒட்டுமொத்த தேசத்தையும் பலவீனமாக அதனைப் பார்த்துக் கொண்டிருக்குமாறு இந்த அரசாங்கம் நிர்பந்தித்துள்ளது.

அத்துடன் நின்றுவிடாமல், புலிகளைச் சுதந்திரமாக நினைவு கூற இடமளிப்பது ஒருபுறமிருக்க, எமக்கு உயிர்பிச்சை அளித்து, ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடைப்பயிற்சி செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த எமது நாட்டு இராணுவ வீரர்களை நினைவு கூரும் தேசப்பற்றாளர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தனது அதிகாரிகளைப் பயன்படுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்ற போது, பயங்கரவாதிகளை ஒடுக்குவது போன்ற பாணியிலேயே பொலிஸார் அவரைத் தடுக்க முயன்றதை நாம் கண்டோம். நன்றியுள்ள மனிதர்கள் இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமா, கைகளில் விலங்கிடப்படும் குற்றமா அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் குற்றமா என்று நாம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

எனவே ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஒன்று நாட்டின் பக்கம் நிற்க வேண்டும், அல்லது பயங்கரவாதிகளின் பக்கம் நிற்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் நயவஞ்சகமாக உறவாடிக்கொண்டு, நாட்டின் பக்கம் நிற்பது போன்ற கபடத்தனமான இருமுகக் கொள்கையை இனிமேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு இடமளிக்கத் தயாராக இல்லை. அதனால், இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டிருக்காமல், நாட்டின் உண்மையான முப்படைத் தளபதியாக உங்கள் இரு கால்களையும் நாட்டின் பக்கமே நிலைநிறுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்