தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்று கூட்டு சேர்ந்ததில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால்வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த ஆறு கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கூட்டாக குரல் கொடுத்து செயற்படுவதே என கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

எத்தகைய அரசியல் கொள்கை விளக்கம் இங்கே? அவசர அவசரமாக கூட்டு உருவாக்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் சக்தி எது? இக்கூற்று அரசியல் மேடை யாரை திருப்திப்படுத்துவதற்காக? கட்சிகள் தங்களுக்கு புதிய புதிய மேடைகளை தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், அது தமிழர்களின் அரசியலுக்கு எதிரானது எனில் அதற்கு எதிரான மக்களின் தீர்ப்பு நிச்சயம் உண்டு என்பதையும் கூற விரும்புகின்றோம்.

தமிழர்கள் முகங்கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நீங்கள் எந்தெந்த பேரினவாத கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தீர்களோ, அமைச்சுப் பொறுப்பை ஏற்று சலுகைகளை முழுமையாக அனுபவித்தீர்களோ, அவர்களே காரணம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். சலுகைகளுக்காக சாமரை வீசிய உங்கள் மனசாட்சிக்கும் தெரியும். இந்நிலையில் தமிழ் மக்களுக்காக புதிய கூட்டு என்பது கேலிக்கூத்து என்பதே மக்கள் அபிப்பிராயம்.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் பிரச்சினையிலும் அன்றாட பிரச்சினைகளிலும் தினமும் களத்தில் நின்று மக்களோடு மக்களாக போராடும் கட்சி ஒன்றை தவிர்த்துவிட்டு, அதுவும் உங்களோடு நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் கட்சியை புறந்தள்ளி “நாங்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கூட்டாக குரல் கொடுக்கப் போகின்றோம்” என்பதன் அரசியல் சூழ்ச்சியை மக்கள் அறிவர்.

தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பும் சிங்கள பௌத்த பேரினவாதமும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதான கட்சியே அதற்கு காரணமாக இருக்கும்போது அதனை விமர்சிக்கவோ அதனின்று வெளியேறவும் துணிவற்றிருக்கும் நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கூட்டாக செயற்படப் போகின்றோம் என்பதை நம்புவதற்கு தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.

அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கையில் அ

கறுப்பு ஜூலையை நினைவுகூரும் மாதத்தில் உங்கள் கூட்டை ஆரம்பித்துள்ளீர்கள். நாட்டில் தமிழர்களின் அவல நிலையை 1983 இன அழிப்பு சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை உலகிற்கு காட்டியது.

இனப்படுகொலை யுத்தம் நடந்தபோது நீங்கள் யாரோடு நின்றீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தற்போது செம்மணி சமூக புதைகுழி அரசியல் நீதியின் சாட்சியாக தோன்றுகையில் அது தொடர்பான நீதிச் செயற்பாட்டில் உங்கள் முகங்களை காண முடியவில்லை.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109