தமிழருக்கு தனியான கலாசார அடையாளம் இருக்கக் கூடாது என்பதே யாழ் கலாசார மண்டபத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்ப்பின் காரணம் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும்இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ் தென்மராட்சி பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கைபொறுப்புநிதியத்தை ஸ்தாபிப்பதற்கு, புத்தசாசனசமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டும் போது அதனை அமைத்து யாழ் மாநகர சபைக்கு வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் பிரகாரம் அமைக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.
பின்னர் யாழ் மாநகர சபை அதன் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனை பராமரித்து தருவதான்ற உறுதி மொழியின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த அரசாங்கம் ஒன்றில் குறித்த கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவுகளை  அமைச்சு பொறுப்பேற்கும் அதனை தமது கண்காணிப்பின் கீழ் வழங்குமாறு கோரியது.
அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்திய தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என அடையாளமாக கட்டப்பட்ட திருவள்ளூர் கலாச்சார மண்டபத்தினை புத்த சாசன அமைச்சையும் நம்பிக்கை பொறுப்பு சபைக்குள் உள்வாங்கியமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் கலாச்சார ரீதியான மற்றும் மத அடையாளங்களைஅழிப்பதற்கும் திரிவு படுத்துவதற்கும் பிரதான காரணமாக விளங்குகின்ற புத்தசாசன அமைச்சை திருவள்ளுவர் கலாச்சார மண்டப நம்பிக்கை பொறுப்புச் சபைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும்.
புத்த சாசன அமைச்சின் கீழ் வருகின்ற தொல்பொருள் திணைக்களம் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பௌத்த மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.
உதாரணமாக கூறின் இராணுவத்தின் துணையுடன் தையிட்டியில்தனியார் காணிக்குள் திட்டமிட்டு பௌத்த மத கட்டுமானத்தை அமைத்தது மட்டுமல்லாமல் இன்று வரை அதனை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளை புத்தசாசன அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
சிங்கள மக்கள் வடக்கில் வசிக்க தகுதியற்றவர்கள் என நாங்கள் கூற வரவில்லை தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குடியாறுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.
இன்று நேற்று அல்ல இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்பவர்களை தெற்கு #இனவாதிகள் என முத்திரை குத்துவதே வரலாறு
தமிழ் மக்கள் ஒன்றை #தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் ஆட்சியில் பௌத்த சிங்கள கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
#ஜேவிபியாக தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது
ஆகவே யாழ்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமை தமிழ் மக்களுக்கென தனியான கலாச்சார அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையே காரணம் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109