‘ட்ரம்பைக் கொல்வோம்’ ஈரானில் அதிர்வலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, “We Will Kill Trump” (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் “We Will Kill Trump” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

ஈரான், அரசியல் மற்றும் புரட்சிகர கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பர பலகைகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பும், டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் “The Breaking Point” என்ற வாசகத்துடன் அவரது வாய் தைக்கப்பட்டிருப்பது போன்ற விளம்பர பலகையை ஈரான் வெளியிட்டிருந்தது.

மேலும், அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஈரானின் வலையில் சிக்கியிருப்பது போன்ற காட்சிகளும் அந்நாட்டின் விளம்பர பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, ஈரானில் வெளியான ஒரு பழமைவாத நாளிதழ், அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததற்குப் பழிவாங்க வேண்டிய இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய விளம்பர பலகை, ஈரான்-அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்