பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (ஜூன் 23) உறுதிசெய்துள்ளது.
தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி ஞானசார தேரருக்கு எதிராகப் பொலிஸாரால் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்குச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பையே மேல் நீதிமன்றம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.