செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இன்று (17.11.2026) முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும், சுயாதீனமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழி முன்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மையும் ஆர்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.