சுவாமி விபுலானந்தர் பிறந்தநாள் விழா அனுஷ்டிப்பு

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனனதின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப்பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலையருகே மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள்,சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன்,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் யுவன்ராஜன்,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா உட்பட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் ஆசிரயர்கள்,மாநகரசபையின் பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது பாடல் பாடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இதன்போது இலக்கணம் என்னும் காலாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

இதேநேரம் மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம் அனுட்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் உதவி பொறுப்பாளர் சுவாமி உமாதீஸ்வரானந்தா ஜீ மஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், பொதுச்ச செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் முத்துக்குமார் செல்வராசா, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, “வெள்ளை நிற மல்லிகையோ” பாடல் பாடி ஜனனதின நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 134 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.

சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப்பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.

மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.

தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.

கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையான சுவாமிகள் எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் என்பதுடன், ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க