சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் தடை

கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ‘உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்’, 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3% சதவீதமானோர் உடல் பருமனுடனும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கணக்கெடுப்பின் போது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பாடசாலை மாணவர்களில் 17.4% சதவீதமானோர் தினசரி கார்போஹைட்ரேட் கலந்த மென்பானங்களை குடிப்பதற்குப் பழகியுள்ளனர் என்பதும் இங்கு தெரியவந்துள்ளது.

அத்துடன், 28.5% சதவீதமான சிறுவர்கள் அதிக உப்பு மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை உண்பதாகவும், மேலும் 41% சதவீதமான சிறுவர்கள் சர்க்கரை கலந்த உணவுகளை ஒரு தடவை அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் உட்கொள்வதாகவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைக்குத் தீர்வாக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இதற்கு முன்னர் ‘ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை வழிகாட்டி’ ஒன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழிகாட்டல்களின் கீழ், கடந்த பெப்ரவரி மாதம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலைகளில் ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறிய வைத்திய நிபுணர், இதற்கமைய பாடசாலைச் சிறுவர்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வது இனிவரும் காலங்களிலும் தடைசெய்யப்படும் என்றும் கூறினார்.

பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவர் புத்திக்கா சுதசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளைப் பாடசாலைகளில் முற்றாகத் தவிர்ப்பதற்கும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி, பின்வரும் உணவுப் பொருட்கள் இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்காக உணவகங்களில் விற்பனை செய்யப்பட மாட்டாது.

சோசேஜஸ், மீட் போல்ஸ், பேக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் விரும்பும் பர்கர், ஹொட் டொக், சப்மரின் மற்றும் பீட்சா போன்ற துரித உணவுகள், கிரீம் பனிஸ், ஜாம் பனிஸ், பேஸ்ட்ரி வகைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிற்றுண்டிகள், உடனடி நூடுல்ஸ், சூப் கட்டிகள், தக்காளி மற்றும் சோயா சோஸ் வகைகள், சுவிங்கம், லாலிபாப், ஜெலி வகைகள், ஐஸ் பாக்கெட் மற்றும் பாடசாலை மாணவர்கள் எளிதில் விரும்பி உண்ணும் அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள், காபனூட்டப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பாக்கெட் பானங்கள் என்பவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை சிறு வயது முதலே தொற்றா நோய்களில் இருந்து பாதுகாக்கவும், அவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்