சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த கபிலவுக்கு பிணை நின்றவர்களிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை? – நீதவான் கேள்வி

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசாரிடம் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பிய நீதவான், இதுவரை அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களோ அல்லது குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று வினவினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, இன்று மூன்றாவது நாளாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரம் வெளிவந்தது.

மரணமடைந்தவரின் தற்போதைய வீட்டிலும், அவர் வசித்து வந்த வீட்டிலும் உள்ள சிசிடிவி தரவுகள் சேமிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களின் டிவிஆர் இயந்திரங்கள் மற்றும் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மாத்திரைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அங்கு அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சமூகத்தில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ள கபில சந்திரசேனவின் பிணையாளர்கள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பினார்:

“இந்த சாட்சிய விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?”

அதற்கு பதிலளித்த பொலிஸார், “சுவாமி… அவர்களிடம் இருந்து இதுவரை வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனது” என்று கூறினர்.

அப்போது நீதவான் கடுமையான தொனியில், “வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனதாகக் கூறி சாட்சியங்களை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையல்லவா முதலில் சாட்சியத்திற்கு அழைத்திருக்க வேண்டும். வாக்குமூலங்களை பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, “சுவாமி… அந்த இரண்டு பிணையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் இல்லையே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் எளிதானதே. என்னிடம் இருந்து உத்தரவைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்திருக்கலாம்” என்று கூறினார்.

விசாரணைகளுக்காக பொலிஸார் கோரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த நீதவான், மரண பரிசோதனை தொடர்பான சாட்சியங்களை அழைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி, முதலாவதாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் செவிலியரான கோசல ரத்னஜீவ சாட்சியமளித்தார்:

“சம்பவம் நடந்தன்று காலை 7.45 மணியளவில் முதல் தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அந்த வீட்டிற்குச் சென்றோம். பின்னர் அந்த வீட்டில் இருந்த ஒரு சட்டத்தரணி எங்களை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் மீது ஒரு ஆடைப் பை வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் தரையில் படுத்திருப்பது போல் கிடந்தார். கழுத்தில் ஒரு துணிப் பட்டி கட்டப்பட்டிருந்தது. முகம் ஒரு நாற்காலியின் மேல் இருந்தது. வைத்தியர் அந்த நபரைப் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். மரணமடைந்தவர் கபில சந்திரசேன என்பதை அறிந்துகொண்டேன். வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நான் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரிந்த ராஜேந்திர குமார் சிவகுமார் சாட்சியமளித்தார்:

“மே 07 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கபில ஐயா எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் இரவு உணவு உட்கொள்ளவில்லை. இரவில் கபில அவர்கள் அரவிந்த ஐயாவுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நள்ளிரவு 12.10 மணியளவில் நான் தூங்கச் செல்லத் தயாரானேன். கடைசியாக நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். அப்போது நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் 12.05 மணிக்கு இடையில் இருக்கும். நான் நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கச் சென்றேன். நள்ளிரவு 1.30 மணியளவில் கழிவறைக்குச் செல்ல நான் விழித்தேன். சமையலறை பகுதியில் விளக்குகள் எரியக் கண்டேன். நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த நேரத்தில் கபில அவர்கள் கையில் ஒரு வெள்ளை நிறப் போத்தலை வைத்துக்கொண்டு ஃபில்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். நான் சாரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். தண்ணீர் எடுக்க வந்ததாகக் கூறினார். நான் அறையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன். பின்னர் அவர் மேலே சென்றார், நானும் தூங்கச் சென்றேன்” என்று சாட்சி கூறினார்.

பின்னர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளரான கிரிஷாந்த கமலசிறி சாட்சியமளித்தார்:

“அரவிந்த டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது வீட்டில் ஐந்து கெமராக்கள் பொருத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில்தான் அவை பொருத்தப்பட்டன. கெமராக்களில் தரவுகள் சுமார் ஒரு மாதம் சேமிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு அழைப்பு விடுத்து அலாரம் அடிப்பதாகப் பார்க்கச் சொன்னார்கள். பரிசோதித்தபோது அதன் ‘ஹார்ட் டிஸ்க்’ சேதமடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது. இந்த கெமராக்களில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்று என்னால் கூற முடியாது. நான் அதனைப் பரிசோதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109