சென்னை:
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரிசையில், கட்சி தொடங்கிய 27 மாதங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விஜய் புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறையினரின் சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவர், கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறையில் முறைப்படி தனது இருக்கையில் அமர்ந்தார். அவரது அமைச்சரவையில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
தொடர்ந்து, சட்டசபையை வழிநடத்த தற்காலிக சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான கோப்புகளில் முதல்வர் விஜய் தனது முதல் கையெழுத்தை இட்டார். நாளை (திங்கட்கிழமை) புதிய எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. குறுகிய காலத்தில் விஜய் அடைந்துள்ள இந்த இமாலய வெற்றி, ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
#VijayAsCM #ChiefMinisterVijay #TVK #BreakingNews #May10 #TamilNaduPolitics #FortStGeorge #VictoryForVijay #ThalapathyVijay #NewGovernmentTN #27MonthsToPower #VijayInFort #HistoryMade #ElectionResults2026 #StalinVsVijay #PoliticalChange #NewEraTN #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_“`