கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை கறந்து வந்த சீன பாதாள உலகக் குழுவின் முக்கியத் தலைவர் ஒருவர், கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, அந்நாட்டு பொலிஸாருக்குப் பயந்து இரகசியமாக இலங்கைக்குத் தப்பியோடு வந்துள்ள குறித்த நபர், கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்களில் தங்கியவாறு இந்த மிரட்டல் மற்றும் கறுப்புப் பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கமல ஆரியவன்ச ஆகியோரின் நேரடிப் பார்வையின்கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் (CCB) பல நாட்களாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாகவே கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்:

வெளிநாடுகளுக்குச் சொந்தமான 2 கடவுச்சீட்டுகள்
வேறு நபர்களுக்குச் சொந்தமான 7 கடவுச்சீட்டுகள்
42 சிம் அட்டைகள்
இலங்கையில் இருந்து நாடுகடத்த நடவடிக்கை
கொழும்பு போர்ட் சிட்டியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் முதலீடுகளுக்காகவும் வருகைதரும் சீன முதலீட்டார்களை இலக்குவதை்து அவர்களை அச்சுறுத்தி இவ்வாறு கப்பம் பெறும் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

​ கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேக நபரை, இலங்கைக்கான சீன தூதரகத்தின் ஊடாக உடனடியாக நாட்டுக்கு நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகளை விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நகரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை நிலவி வரும் நிலையில், இந்த அதிரடித் கைது பாரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு

rai

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை

October 14, 2026

நாட்டை அண்மித்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை காரணமாக, மழை அளவு மேலும் அதிகரிக்கும்

vimal

போலிப் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு

October 14, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட

GL

சிறையில் உள்ள மதத் தலைவர்களின் ஆடை குறித்து அரசு ஏமாற்று வேலை செய்கிறது – ஜீ.எல். பீரிஸ்

October 14, 2026

சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை வெளியிலும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியவேண்டிய உடைகள் குறித்து

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்