கொரியக் குடியரசியன் ஹ்வாசியோங் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களை உடல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர்களின் மரணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விரைவுப்படுத்தப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையில் மேலும்,
கொரியக் குடியரசின் ஹ்வாசியோங் (Hwaseong) பகுதியில், 2026 நவம்பர் 26 அன்று இரவு சுமார் 9.00 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், இலங்கையைச் சேர்ந்த இரு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து, கொரியக் குடியரசின் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சியோலில் உள்ள எமது தூதரகத்திற்கு 2026 நவம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக, எமது தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular Section), கொரிய அதிகாரிகள், அமைச்சகம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இவர்கள் இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவு செய்த பின்னரே கொரியக் குடியரசிற்குச் சென்றிருந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக மற்றும் நலன்புரி உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும், பூதவுடல்களை இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரியாவில் உயிரிழந்த இரு இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு