“கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றி யோசித்திருந்தால் திமுக ஆட்சி பறிபோயிருக்காது – எ.வ.வேலு”

சென்னை கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றி யோசித்திருந்தால் இன்று ஆட்சி நம்மிடம் இருந்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மனிதநேய உதய நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேச்சாளர் […]

“திங்கள்கிழமை வந்தாலாவது முதலமைச்சர் விஜய் பேசுவாரா?” – மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டு கால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும், வார இறுதி ஓய்வு முடிந்து திங்கள்கிழமை வந்தாலாவது பேசுவாரா என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் நிர்வாகத் திறன் மீது விமர்சனம்: இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் Judicial […]

“டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா?” – திமுக மீது தவெக ஐடி விங் கடும் விமர்சனம்!

சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும், இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் திமுக இன்று அறிவித்துள்ள நிலையில், இதனை ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. திமுகவின் நிலைப்பாட்டுக்குத் தவெக ஐடி விங் பதிலடி: இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டெல்லி அணியா தமிழ்நாடு அணியா, பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான், பாஜகவுடன் ஒட்டோ உறவோ இல்லை, தொகுதி […]

மாவீரர் தினத்தில் தமிழ் இளைஞர்கள் கைது..!

மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில், நினைவு நிகழ்வுகளின்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியதற்காகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (28.11.2026) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற நினைவு நிகழ்வுகளைப் பொலிஸார் தீவிரமாகக் கண்காணித்துள்ளனர். இதற்கமைய, அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு ஆபத்து..!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று(28.11.2026) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை’ மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கோரியுள்ளார். இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியல் சுதந்திரம், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), […]

கொழும்பு சென்ற பஸ் மீது கற்பாறை விழுந்ததில் பயணி பலி!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 அளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ் பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பஸ்ஸின் மீது விழுந்துள்ளது. இதில் பஸ்ஸின் […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக விடுக்கப்பட்டமண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.   இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி  பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, ஹதரலியத்த, பாஸ்பாகே கோரளை (புதிதாக இணைக்கப்பட்டுள்ளது), கங்க இஹல கோரளை, தும்பனை, உடபலாத, உடுதும்பர மற்றும் உடுநுவர, கேகாலை மாவட்டத்தின் […]

யாழில் ‘மாத்தறை அம்புல’ உணவக இடிப்பு சர்ச்சை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “மாத்தறை அம்புல (Matara Ambula)” உணவகத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிங்களக் குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த இந்த உணவகம், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலக்கம் 103 என்ற முகவரியில் உள்ள வாடகைக் கட்டிடத்தில் சுமார் […]

சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் படகு முற்றுகை

தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நாடற்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த படகில் பயணித்த ஏழு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வெள்ளிக்கிழமை (27) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். எனினும், கைப்பற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தொடர்பான விபரங்கள் […]

மாவீரர்நாள் வளைவு விவகாரம்: தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் வாக்குமூலம்!

மாவீரர் நாள் வளைவு விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் பிரதேச சபையில் வைத்து குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பிரதேச சபையின் சட்டத்தரணி சிவலிங்கம் ரிசிகேசனும் பிரசன்னமாகியிருந்தார்.