“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – துப்பாக்கியால் உயிரைத் தீர்மானிப்பதா? வேல்முருகன் ஆவேசம்!

சென்னை
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இரு மாநில அரசுகளுக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சுட்டுக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன?:
“வனத்துறையினர் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகின்றனர்; ஆனால் மாடுகளைத் தேடிச் சென்றதாக உறவினர்கள் கூறுகின்றனர். உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது. மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்தது? துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா? தமிழர்களின் உயிரைத் துப்பாக்கிக் குண்டுகளால் தீர்மானிக்கும் நிலையை ஒருபோதும் ஏற்க முடியாது,” என வேல்முருகன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“20 தமிழர்களின் மரணம்… பாடம் கற்கவில்லையா?”:
“2015-ஆம் ஆண்டு ஆந்திரக் காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காயமே இன்னும் ஆறாத நிலையில், தற்போது மீண்டும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர, கையில் துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக எளிய மக்கள் மீது பயன்படுத்தக் கூடாது. உயிரிழந்தவர்கள் காவிரியின் வரலாற்றோடு வாழும் தமிழர்கள்; அவர்கள் அந்நியர்கள் அல்ல,” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு வேல்முருகனின் கோரிக்கைகள்:
  • சுயாதீன விசாரணை: இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்துக் கர்நாடக அரசிடம் தமிழக அரசு உடனடியாக விளக்கம் கேட்பதுடன், முழுமையான மற்றும் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.
  • நிவாரணம் மற்றும் சட்ட உதவி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தமிழக அரசு நேரடியாகச் சந்தித்து, உரிய இழப்பீடு மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும்.
  • நிரந்தரப் பாதுகாப்பு: உயிர் பிழைத்த நபரின் பாதுகாப்பையும் மருத்துவ சிகிச்சையையும் உறுதி செய்ய வேண்டும். எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
#Velmurugan #TVKParty #TamilNaduNews #KarnatakaForestShooting #JusticeForTamils #TamilsKilled #TNPolitics #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை