‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை விசாரணையில் புதிய திருப்பங்கள்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் இருந்து முழுமையாக வெள்ளையாக்கும் நடவடிக்கைகளை இவரே முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் கம்பஹா ஒஸ்மண்ட் கடந்த 13ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 மெகசின்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மண்டை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அந்தக் காலப்பகுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (16) அனுமதி பெற்றுள்ளனர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மேயுடன் அவர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அத்துடன், சமூகத்தையும் பொலிஸாரையும் திசைதிருப்பும் நோக்கில், தாங்கள் இருவருக்கும் இடையே கடுமையான பகைமை இருப்பதாக நீண்டகாலமாக அவர்கள் காட்டி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணை அதிகாரிகளின்படி, கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கம்பஹா ஒஸ்மண்டிற்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், அவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பத்மேயின் சகாக்கள் பல சந்தர்ப்பங்களில் கம்பஹா ஒஸ்மண்டை கொலை செய்யத் தயாராக இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், அவை அனைத்தும் வெறும் நாடகம் என்பதும் அம்பலமாகியுள்ளது.

பத்மேயின் கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் இருந்து வெள்ளையாக்கும் பணிகளை முழுமையாக கம்பஹா ஒஸ்மண்டே வழிநடத்தியுள்ளார் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்தேகநபர் தனது வியாபாரங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கெஹெல்பத்தர பத்மேயிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்திய விசாரணைகளின் போது இவர் குறித்த எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.

எனினும், அண்மையில் அஸர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பட்டுவத்தே சாமர’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மண்ட் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

முக்கியமாக, கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கம்பஹா ஒஸ்மண்டே வழங்கியுள்ளார் என்பதும் அதன்போது தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109