மீன்பிடிக்க வீசிய வலையில் சிக்கிய சடலம்!

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து, அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து […]

பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இனப்படுகொலை நிரைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக் வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சமைக்கப்பட்டு, உணர்வு ரீதியாக வழங்கப்பட்டது. பி.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் என பலரும் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் […]

தவெக அரசிற்கு மே 17 இயக்கம் முன் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஊடகச் சந்திப்பு

இனப்படுகொலையான ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களுக்கு 17ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 17, 2026 ஞாயிறு மாலை 5 மணிக்கு, சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்த இருக்கிறது. எனவே மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், தவெக அரசிற்கு தமிழினப்படுகொலை நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும், இனப்படுகொலை நாளாக மே 18 ஆம் நாளை அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மே 17 இயக்கம் […]

வடமராட்சியில் நீரில் ழூழ்கி சிறுவன் பலி

வல்வெட்டித்துறையில் உள்ளநீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3:00 மணியளவில் குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் ழூழ்கி பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில்வளர்ந்து வந்த நிலையில் இவ் துயரச்சம்பம். இடம் பெற்றுள்ளது பருத்தித்துறை பு லோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தீலிபன் சந்தோஷ் வயது 16. என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை […]

சுவிஸில் இருந்து யாழ் திரும்பிய முதியவர் படுகொலை — நகை, பணம் கொள்ளை

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவரை முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் படுகொலை செய்து நகைகளும் பணமும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.பாதிக்கப்பட்டவர் யார்? மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் நீண்ட காலமாக சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர். கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.சம்பவம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? மே 14ஆம் திகதிக்குப் பிறகு குடும்பத்தினரால் அவருடன் தொடர்பு […]

டொராண்டோ தூதரக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் ஈரானிய ஆதரவுத் தளபதிக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய அமெரிக்கா

தொடர்புடைய செய்தி: டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு; தேசிய பாதுகாப்புச் சம்பவமாகப் பிரகடனப்படுத்திய காவல்துறை – மார்ச் 10, 2026 அமெரிக்காவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஈராக் நாட்டவர் ஒருவருக்கு, கடந்த மார்ச் மாதம் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முகமது பாகர் சாத் தாவூத் அல்-சாதி (Mohammad Baqer Saad Dawood Al-Saadi) மற்றும் அவரது […]

மிசிசாகா விலங்கு வதை விசாரணையின் போது 60 க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு

விலங்கு வதை (Animal cruelty) குறித்த விசாரணையில், காவல்துறையினர் சுமார் 60 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் விலங்கு வதை குறித்த விசாரணையின் போது, காவல்துறையினர் 57 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகப் பீல் (Peel) பிராந்திய […]

“ஜெயலலிதாவும் முதலில் 7 பேரைத்தான் அமைச்சராக்கினார்!” – அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமா? செங்கோட்டையன் ஓப்பன் டாக்!

கோவை: “தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்; அதில் யார் இடம்பெறுவார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் தான் முடிவு செய்வார்” என்று நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் செங்கோட்டையனிடம், தவெக அமைச்சரவையில் இன்னும் பல முக்கிய துறைகள் ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்தும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், “முதலமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை அப்படியே நிறைவேற்ற […]

“17 ஆண்டாகியும் நீதி கிடைக்கவில்லை, தமிழ் இனத்தை வாழ விடுங்கள்!” – முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடிகர் நிழல்கள் ரவி உருக்கம்!

சென்னை: “இலங்கையில் கொடூர யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும், இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை சர்வதேச அரங்கில் நீதி கிடைக்கவில்லை; தயவுசெய்து தமிழ் இனத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்” என்று பிரபல மூத்த நடிகர் நிழல்கள் ரவி கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசியுள்ளார். நாளை மே 18-ஆம் தேதி, உலகத் தமிழர்களால் ‘முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு நாள்’ மற்றும் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2009 மே […]

சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னை அடையாறு ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை!

சென்னை: தமிழ்த் திரைத்துறையின் மூத்த மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்த கே. ராஜன், அடையாறு மேம்பாலத்தின் அருகே சென்ற போது திடீரென காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். கார் நின்றவுடன் அதிலிருந்து இறங்கிய அவர், கண் இமைக்கும் நேரத்திற்குள் ஆற்றில் குதித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது […]