டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து: பெண் ஒருவர் படுகாயம்

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown Toronto) நள்ளிரவில் நேர்ந்த, வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் (Rollover crash) பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை 3:00 மணிக்குச் சற்றுப் பின்னர் ‘குவீன் ஸ்ட்ரீட் வெஸ்ட்’ இற்குச் (Queen Street West) சற்றுத் தெற்கே உள்ள ‘ஸ்ட்ரஹான் அவென்யூ’ (Strachan Avenue) பகுதிக்கு அவசரக்கால மீட்புக்குழுவினர் அழைக்கப்பட்டனர். டொராண்டோ தீயணைப்புப் சேவைப் பிரிவினர் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒருவரை வெளியேrescue செய்ய […]

வோன் நகரில் நள்ளிரவில் நேர்ந்த விபத்து: ரூதர்போர்ட் ரோட்டிற்கான நெடுஞ்சாலை 427 இன் வெளியேறும் பாதை மூடல்

வோன் (Vaughan) நகரில் நெடுஞ்சாலை 427 இல் ஏற்பட்ட ஒற்றை வாகன விபத்தைத் (Single-vehicle collision) தொடர்ந்து ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் பயணிகள் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, ரூதர்போர்ட் ரோட்டுடன் (Rutherford Road) இணையும் நெடுஞ்சாலை 427 இன் வடக்கு நோக்கிய வெளியேறும் பாதை (Northbound off-ramp) மூடப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியுள்ள […]

எட்டோபிகோ அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோ (Etobicoke) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, 30 மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நள்ளிரவு 12:00 மணியளவில் கிப்ளிங் அவென்யூ (Kipling Avenue) மற்றும் ஆல்பியன் ரோடு (Albion Road) பகுதியில் நடந்துள்ளதாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு நபர் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பலியானவரின் பெயரை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் அவர் 30 வயதுகளில் […]

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று (17) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்மாக உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் சிக்குண்டு […]

அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்கு துணை போனாது காங்கிரஸ் கட்சியே – இயக்குனர் ராஜேந்தர்

வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு துக்க தினம். இது ஒரு கறுப்பு தினம். எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு தினம். அன்று எமது இனம் எப்படி துடிதுடித்திருக்கும். எப்படி வேதனைப்பட்டிருக்கும். […]

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி போராடிய தாய் மரணம்!

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த மேலும் ஒரு தாய் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்மணி நேற்று சனிக்கிழமை (16) காலமானார். அவர் 05.09.1951 அன்று பிறந்தவர். தனது குடும்ப உறவுக்காக மட்டுமன்றி, வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்காக நீதியை கோரி […]

நாம் ஏற்றுகின்ற சுடர் உயிரிழந்த தியாகிகளுக்கு கௌரவமாகவும் எம் அரசியல் எதிரிகளுக்கு விழிப்பையும் உண்டாக்க வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் […]

மடு பெரிய முறிப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொது மக்களின் ஏற்பாட்டில், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு பகுதியில் இன்றைய தினம் (17) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் இறுதி […]

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயராஜ் காலமானார்

இலங்கையின் மிக முக்கிய மற்றும் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இத்தகவலை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்து பல தசாப்தங்களாக ஆழமான, காத்திரமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த அவர், சர்வதேச அளவில் வாசகர்களைக் கொண்டவர் ஆவார். ‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily […]

கிளிநொச்சியில் கொக்காவில் பகுதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கொக்காவில் பகுதியில் கார் மற்றும் கணரக வாகன விபத்து ஒருவர் பலி கிளிநொச்சி – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(17.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பகுதியில் கார் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. […]