“அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை; கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போடுங்கள்!” – அமைச்சர் கீர்த்தனாவுக்குத் தங்கம் தென்னரசு கண்டனம்!

சென்னை: “தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து அடிப்படைப் புரிதல் இல்லாமல், முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பரப்பி வருகிறார்” என்று முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கடந்த ஆட்சியில் (திமுக ஆட்சியில்) இதுவரை 10.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துள்ளார்கள். அங்கு என்ன நடந்துள்ளது என்பது […]

300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பிய சோழர் காலத்து ‘லெய்டன்’ செப்பேடுகள்! நெதர்லாந்து அரசிடம் இருந்து பெற்றார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம், உலகப் புகழ்பெற்ற சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் தாமிர தகடுகள்’ (லெய்டன் செப்பேடுகள்) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் தற்போது இந்திய அரசிடம் மீட்கப்பட்டுள்ளது பெரும் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 11-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட சோழப் பேரரசின் வரலாற்று ஆவணமாக இந்தச் செப்பேடுகள் விளங்குகின்றன. சுமார் 30 கிலோ எடை […]

எபோலா தொற்று பரவல்; உலக அவசரநிலை பிரகடனம்

மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு ​கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் வேகமாக பரவிவருகிறது. தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற […]

வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வரவிருக்கும் பதிவுச் செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் […]

போதைப்பொருட்களுடன் இருவர் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி, விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலுக்கு அமைவாக, அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் […]

நாட்டில் தாழமுக்கம் வலுவிழக்கிறது!

இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள வளிமண்டல தாழமுக்கநிலை வலுவிழந்து வருதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், மழையுடனான காலநிலையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17.05.2026) காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய […]

சண்டிலிப்பாயில் நபர் ஒருவர் படுகொலை: சுவிஸில் இருந்து வந்ததாகத் தகவல்

விட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றையும் கொலைக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த […]

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி; மே 27 இல் மதிப்பாய்வுகள்

லங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை குறித்துள்ளது. நிறைவேற்றுக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வழி திறக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த மதிப்பாய்வுகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதேவேளையில், செலவுகளை ஈடுசெய்யக்கூடிய மின்சாரம் […]

மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்தையே நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச […]

அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தின் வரைபு இந்த மாதம் நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

திருத்தப்பட்ட “அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்” (Protection of the State from Terrorism Act – PSTA) என்ற தலைப்பிலான புதிய சட்டமூலத்தின் வரைவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தச் சட்டமூலத்தை வரைவு செய்வதற்குப் பொறுப்பான குழு, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு (Legal Draftsman’s Department) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இச்சட்டமூலம் இந்த மாதத்திற்குள் நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன (Rianzie Arsekularatne) தலைமையிலான 17 நிபுணர்கள் அடங்கிய […]