அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்கு துணை போனாது காங்கிரஸ் கட்சியே – இயக்குனர் ராஜேந்தர்

வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு துக்க தினம். இது ஒரு கறுப்பு தினம். எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு தினம். அன்று எமது இனம் எப்படி துடிதுடித்திருக்கும். எப்படி வேதனைப்பட்டிருக்கும்.

அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் என்று மலரும் என்று எனது மனம் தினம் தினம் ஏங்குகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன் காங்கிரஸ் கரம் நீட்டுகிறது என்றவுடன் இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி?

அப்பாவி தமிழர்கள் அன்று தங்களை இழந்தபோது எனக்கு எப்படி வலித்திருக்கும்? அன்று எனக்கு எப்படி துடித்திருக்கும்? என் ஈழத் தமிழ் இனத்தின் மீது அன்றைக்கு அவன் போட்டான் வேட்டு, சிங்களவர்களோடு இந்த காங்கிரஸ் வைத்தது கூட்டு, இன்றைக்கு திமுகவோடு வைத்தது கூட்டு, நேரம் பார்த்து வைத்தது வேட்டு. இப்போது உங்களுக்கு வலிக்குதே. ஈழத் தமிழர்கள் காங்கிரஸால் படாத பாடுபட்ட போது எனக்கு எப்படி வலித்திருக்கும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Sajith-Premadasa-4

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான கூட்டிணைவுகளை’ ஏற்படுத்த சஜித் அழைப்பு!

November 23, 2026

இலங்கையின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு அப்பால் சென்று, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் சர்வதேசப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்ப, அனைத்து

namal raja

வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!

November 23, 2026

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் சீன முதலீட்டின் தற்போதைய

gold

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

November 23, 2026

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22

902143220_122227379858360374_6202966544825060215_n

Behind Me Media தலைமை அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் 2026

November 23, 2026

2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாவீரர்

ESRMM5KXWZF6DJL5FX27WSXIRA

ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்களின் விபரங்களை வெளியிட்டது ரொறன்ரோ பொலிஸ்; மற்றுமொருவர் வைத்தியசாலையில்

November 23, 2026

ரொறன்ரோவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த 16 வயதுடைய

XEGVFSJHLQOUE52IQUWWOTHB5Q

அமெரிக்கா – கனடா வர்த்தக ஒப்பந்தம்  மிகவிரைவில்: அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தகவல்

November 23, 2026

அமெரிக்கா கனடா வர்த்தக ஒப்பந்தம் மிகவிரைவில் எட்டப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer)

jafffsdf

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பல வாகனங்களை மோதி விபத்து

November 23, 2026

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார்

arr

துப்பாக்கி தோட்டாக்களுடன் மிருசுவிலில் இருவர் கைது

November 23, 2026

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

acci main

திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் பலி

November 23, 2026

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப்

images (5)

இதுவரை 22 மட்டுமே தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்வு!

November 23, 2026

1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதற்காக 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்துக்காக சுமார் ரூ. 1,600 மில்லியன் நிதி செலவிடப்பட்ட போதிலும்,

sl t

சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு உடன்படிக்கை; இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பம்!

November 23, 2026

சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பமிட்டுள்ளன. பயணங்களை எளிதாக்குவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான

jaf

யாழ் மத்திய பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும்

November 23, 2026

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் காணியை அபகரிக்கும் நடவடிக்கையை உரிய அதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என அகில இலங்கைப்