“ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் தலைமைக்கு அழகு!” – எஸ்.பி.வேலுமணி பதிவு!

சென்னை:

ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் தலைமைக்கு அழகு என்று அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சந்திப்பும் எடப்பாடி பழனிசாமி பதிலும்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியில் தவெக அமைச்சர் செங்கோட்டையனும், அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணியும் சந்தித்துப் பேசினர். இதனிடையே, கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தச் சந்திப்பு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரைப் பற்றி இங்குக் கேள்வி எழுப்ப வேண்டாம்,” என்றார்.

தொண்டரில் ஒருவன் என்பதே பெருமை:

இதற்குப் பதிலளிக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2 கோடி தொண்டரில் ஒருவர்தான் வேலுமணி என என்னை உதாசீனப்படுத்துவதாக எண்ணி அவர் சொல்லியிருந்தாலும், இதைவிட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது? அதிமுகவின் தொண்டன் என்பதுதான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்குப் பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன பொதுச்செயலாளருக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைக்கு அழகு:

தொடர்ந்து அவர், “இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டுத்தான் தாங்கள் இன்றைக்குப் பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்தத் தொண்டன்தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அந்தத் தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடித் தொண்டன் பத்திரிகை வைத்தால் அந்தக் கல்யாணத்தில் எம்.ஜி.ஆர் இருப்பார்; கடைக்கோடித் தொண்டனின் குரலுக்கு ஜெயலலிதாவின் கான்வாயே நிற்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

ஒற்றுமைக்கான வலியுறுத்தல்:

மேலும் அவர் கூறுகையில், “இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் பிரிவினையின்றி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே 2 கோடி தொண்டர்களின் குரல். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், செங்கோட்டையன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்து பயணிக்கப் பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால்தான் அவர்கள் வேறு கட்சிகளுக்குச் சென்றார்கள். தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என்று எஸ்.பி.வேலுமணி பதிவிட்டுள்ளார்.

#SPVelumani #EdappadiPalaniswami #AIADMK #Sengottaiyan #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

6

“தவெக ஆட்சியில் தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது!” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

November 22, 2026

தர்மபுரி: கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அனுபவமின்மையால் தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கிச்

5

“ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் தலைமைக்கு அழகு!” – எஸ்.பி.வேலுமணி பதிவு!

November 22, 2026

சென்னை: ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் தலைமைக்கு அழகு என்று அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளப் பதிவில்

4

“மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

November 22, 2026

சென்னை: மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக

3

“புரட்சித்தலைவர் வேறு, புரட்சித்தலைவி வேறு, எடப்பாடி வேறு!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

November 22, 2026

கோவை: மன்னிக்கும் தன்மை மற்றும் பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை என்றும், அது எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்

2

“மாணிக்கம் தாகூர் காங்கிரஸில் இருந்தது போதும்; தவெகவில் இணையட்டும்!” – அண்ணாமலை பேட்டி!

November 22, 2026

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய

6-2026-11-21-12-48-46

“முதலீட்டு மாநாடு: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷிற்கு பதிலடி!” – அமைச்சர் கீர்த்தனா பதிவு!

November 22, 2026

சென்னை: ஆந்திராவில் நடைபெற்ற முதலீட்டு மாநாடு தொடர்பான ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷின் கருத்திற்கு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்

79

சமூக ஊடகங்களில் சாதிக்கும் 96 வயதுப்பெண்!

November 22, 2026

80, 90 வயதிலும் சமூக ஊடகங்களில் சாதிக்க முடியுமா? முடியும் என்று நிரூபிக்கின்றனர் சில பாட்டிகள்! அமெரிக்காவைச் சேர்ந்த

arrest

எரிவாயு தட்டுப்பாடு; மஞ்சள் சிலிண்டருக்கு நீலம் பூசிய மூவர் கைது

November 22, 2026

மஞ்சள் எரிவாயுத் (Laugfs Gas) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு மாற்றீடாக, மஞ்சள் எரிவாயுச் சிலிண்டர்களுக்கு நீல நிற வண்ணம்

jud

முல்லைத்தீவில் மாணவியை வன்புணர்ந்த பூசகருக்கு தண்டனை உறுதி

November 22, 2026

முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக்

rupe

போலி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்த ஓட்டோ சாரதி; ஆசிரியையிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி

November 22, 2026

பொலிஸ் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் (SI) சீருடையில் பாடசாலையொன்றுக்கு அந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருநாள் வந்துள்ளார். போதைப்பொருட்களின் தீமைகள்

rupe

போலி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்த ஓட்டோ சாரதி; ஆசிரியையிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி

November 22, 2026

பொலிஸ் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் (SI) சீருடையில் பாடசாலையொன்றுக்கு அந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருநாள் வந்துள்ளார். போதைப்பொருட்களின் தீமைகள்

aru

‘அரும்புகள் வாசிப்புக் கழகம்’ ஆரம்பம்

November 22, 2026

இரத்தினபுரி, வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் “அமரர் ரமணி பாலேந்திரா நினைவு நூலகம்” சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது. அமரர் ரமணி