எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 392).

லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 528).

பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆகப் பதிவாகியுள்ளது (முந்தைய விலை: ரூ. 414).

பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 475).

எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

acci main

அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

November 2, 2026

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

arrest

கொக்கேய்னுடன் தச்சர் கைது!

November 2, 2026

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச

gun

சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

November 2, 2026

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

hu

மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

November 2, 2026

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித்

fuel_1

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

November 2, 2026

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர

4

வேண்டிய வரங்கள் யாவும் தரும் கந்த சஷ்டி விரதம்!

November 2, 2026

ண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை மிகச்சிரத்தையோடு அனுஷ்டித்து வருகின்றனர். முருகன் பக்தர்கள் நெஞ்சார எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிஅற்புதமான

8

“தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்!” – சேகர்பாபு கடும் விமர்சனம்!

November 1, 2026

சென்னை: சென்னையில் கடந்த செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப்

7

“இரு திருடர்கள் சேர்ந்து விஜய் தொடரக் கூடாது என திட்டம் தீட்டுகின்றனர்” – தவெக எம்எல்ஏ முஸ்தபா சாடல்!

November 1, 2026

மதுரை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சி தொடரக் கூடாது எனத்

6

“திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?” – கனிமொழிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி!

November 1, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தெளிவுபடுத்த

photo-collage.png

கொழும்பில் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் பொதுச்சபை வரவேற்பு நிகழ்வு!

November 1, 2026

பொய்யான தகவல்களைக் கட்டுப்படுத்துவதிலும், பொதுமக்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், சமூகங்களிடையே அமைதியையும் புரிதலையும் ஏற்படுத்துவதிலும் பொறுப்புள்ள ஊடகவியல் முக்கிய பங்கு வகிப்பதாக

cc

பொலிஸ் நிலையங்களில் CCTV கண்காணிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு

November 1, 2026

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான

5

“நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்-அமைச்சர் விஜய் ஆணை!”

November 1, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்படி, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது