எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஓட்டோ டீசலின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 543 […]
’எரிவாயுவை பதுக்க வேண்டாம்’!

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அனுமதியற்ற மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லிட்ரோ நிறுவனம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது விநியோக வலையமைப்புக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் மூலம் நிறுவனம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுகளைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் […]
காலநிலை முன் அறிவிப்பு!

நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய […]
பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் கூட்டங்கள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப் பிரிவுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடர், வாரத்தில் ஐந்து நாள்களும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]
சீன அரசின் உதவியுடன் 9 பாலங்கள்

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா – பெம்முல்ல பகுதியில் அமைந்துள்ள 5/3 இலக்கப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவா ஷியாங் மற்றும் அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் பெம்முல்லையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ் கம்பஹா, கேகாலை, குருநாகல், […]
முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறித்த சூறாவளி, நேற்று (1) இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த சூறாவளி மேற்கு-வடமேற்கு […]
யாழில் பரபரப்பு! – நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இரவு வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முற்பகல் வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடிய இருவரும் அதனைப் பற்றைக்குள் கட்டி வைத்துள்ளனர். இதனிடையே, தனது ஆடு காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். […]
அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. […]
கொக்கேய்னுடன் தச்சர் கைது!

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 64 வயதுடைய தென் கொரிய நாட்டு தச்சர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தவறவிட்ட தனது பயணப் பையைப் பொறுப்பேற்பதற்காக வந்தபோதே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் […]
சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நேற்றுபிற்பகல் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்பு சாவடிக்கு (Watchtower) ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். இதன்போது தப்பிச் செல்ல முயன்ற கைதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மேலும் […]