நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படும் CCTV காட்சிகளைக் கொண்டு பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் தீவு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அதிநவீன கண்காணிப்பு முறையன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.