தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான சுரேஷ் சாலி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளுக்கு அமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இந்தச் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.