ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுத்தர வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டுமென முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுத்தர வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானங்களை விட வலிமையான தீர்மானங்களை நிறைவேற்றி, தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுத்தர தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய் முன்வர வேண்டும்.

மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் படுகொலை நடந்த மே மாதம் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை நன்கு அறிவார் . இளம் வயதில் தன்னுடைய பொறுப்புக்களை எடுத்துள்ளார்.

இனி வரும் காலங்கள் இவருக்கு சவால் மிகுந்தவை. அரசியலில் புது வரவு இவரின் வரவு தமிழ் நாட்டு மக்களிடையே மாத்திரம் இல்லை உலக தமிழர்களிடையே பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2009 ஆண்டுக்கு முற்பட்ட 30ஆண்டுகளாக மிகுந்த போராட்ட வலிகளோடு பயணித்த ஈழத்தமிழர்கள் இவற்றை அறிந்தவர் என்ற வகையில் அவரின் பார்வை ஈழத்தமிழருக்குரியதாக இருக்கும்.

தொடர்ந்து அண்மைக்காலமாக மர்மமான முறையில் இறப்புக்கள் பதிவாகின்றன. சிறீலங்கா எயார்லன்ஸ், நிறைவேற்று அதிகாரி கபில சந்திர திறைசேரின் முக்கிய அதிகாரி ரங்க ராஜபக்ச போன்றோர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

குற்றவாளிகளை வெளிநாடுகளிலிருந்து பிடித்து வருகின்ற இந்த அரசாங்கம் இவற்றிற்கு உரிய விசாரணை நடாத்தி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தமிழரசுக்கட்சியின் வடமாகாணம் ரீதியில் நடாத்திய மே தின கூட்டத்திற்கு கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.

புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் பொருளாதார காரணத்தை காட்டி காலம்தாழ்த்தும் செயற்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்