ஈரானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் துறைமுகமான புஜைராவில் (Fujairah) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் எண்ணெய் சேமிப்பு நிலையமாக புஜைரா விளங்குகின்றது. முன்னதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் இந்தத் துறைமுகம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக புஜைரா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளைத் தாம் இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே, இந்த ட்ரோன் தாக்குதல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.