இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யுமாறு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறைச்சாலையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று (22) பாம்பன் பாலத்துக்கு முன் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியதோடு, அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து நீர்கொழும்பு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.

மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதான வீதியில் மீனவ குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் வீதிமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் வீதி பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில்,

தமிழக அமைச்சரவையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை இந்திய பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவைப் பெற்றுத்தர வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 27ஆம் திகதி மீனவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்