நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: 5500 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 1651 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் 6 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 234 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. காலநிலை தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், மேல், சப்ரகமுவ மற்றும் […]

அர்ச்சுனா எம்.பி. மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார். கடந்த மே 19-ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா இராமநாதன் எம்.பி., பாராளுமன்ற நூலகத்தில் வைத்து கௌசல்யா நரேந்திரன் என்ற பெண் தொடர்பில் தான் தவறாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் ஒருவரைத் தான் சந்திக்கவே இல்லை என்றும், அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் […]

கனடாவைப் புதுப்பிக்கும் திட்டத்தில் ஆல்பர்ட்டா மாகாணம் மையப்புள்ளியாக இருப்பது மிக முக்கியம்! – பிரதமர் மார்க் கார்னி அதிரடி உரை

கனடா நாட்டிலிருந்து ஆல்பர்ட்டா (Alberta) மாகாணம் பிரிந்து செல்வது குறித்து, எதிர்வரும் இலையுதிர்காலத்தில் மாகாண மட்டத்திலான விசேட வாக்கெடுப்பு (Referendum) ஒன்று நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், உலகிலேயே மிகச்சிறந்த நாடு கனடா என்றும், ஆல்பர்ட்டா மாகாணத்துடன் இணைந்து நாட்டை மேலும் சிறந்த இடமாக மாற்றுவதற்குத் தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney) வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் (Parliament […]

மில்லியன் கணக்கான சாதனங்களை முடக்கிய சைபர் குற்றச்சாட்டு; ஒட்டாவா இளைஞர் கைது

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கணினிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை இணையவழியாக ஊடுருவி, பாரிய சைபர் குற்றப் பின்னணியில் (Cybercrime operation) செயற்பட்டு வந்த கனடாவின் ஒட்டாவா (Ottawa) நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சர்வதேச கூட்டுப் பொலிஸ் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேகப் பட்லர் (Jacob Butler) எனப்படும் இவ்விளைஞருக்கு எதிராகக் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் தற்போது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘கிம்வொல்ஃப்’ (Kimwolf) மற்றும் […]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பிரபல நடிகர் படுகொலை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்திலுள்ள ‘லயன்ஸ் பே’ (Lions Bay) பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பிரபல நடிகர் ஒருவர், படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கருதி அந்நாட்டுப் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 45 வயதான ஸ்டீவர்ட் மெக்லீன் (Stewart McLean) எனும் இந்நடிகர், கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கடந்த மே 18 அன்று ஸ்குவாமிஷ் (Squamish) பிராந்திய அரச மாகாண காவல்துறைக்கு […]

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடிக்கு இனிமேல் இடமில்லை; ஜனாதிபதி உறுதி

நாட்டில் மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனச் சில தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வந்த போதிலும், அத்தகையதொரு இக்கட்டான நிலைமை எக்காரணம் கொண்டும் இனிமேல் நாட்டில் ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் ஒரு தற்காலிக ‘வெளிப்புற நெருக்கடி’ (External crisis) மாத்திரமே எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான முழுமையான பலமும் தகுதியும் […]

தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் இன்றும் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்?

“மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், அவர்கள் இன்று பல உயர் பதவிகளில் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க, தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் இன்றும் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்? அவர்கள் தாங்கள் நம்பிய அரசியல் கொள்கைக்காகப் போராடியவர்கள் என்பதால், அவர்களைச் சாதாரண குற்றவாளிகளாகப் பார்க்க முடியாது.” என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் தெளிவான விளக்கத்தைக் கோரினார். பாராளுமன்றத்தில்  நிலையியற் […]

வனவாசல ரயில் விபத்தில் 17 லட்சம் ரூபாய் நட்டம்

வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால், ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக, சுமார் 200 அடி நீளத்திலான ரயில் தண்டவாளங்கள், சிலிப்பர்கள் (Sleepers) மற்றும் தண்டவாளப் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அதன் பாதை மற்றும் கைத்தொழில் உப திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த தண்டவாளப் பகுதிகள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுவிட்டதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், விபத்தினால் ரயில் சமிஞ்ஞை (Signal) முறைமை […]

மலையேற்ற வீரர்கள் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் அடைந்து புதிய வரலாற்று சாதனை!

274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும். மலையேற்ற வீரர்கள் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் எவரெஸ்ட்டை அடைய முடியும் என்ற போதிலும், நடப்பு ஆண்டில் சீன அதிகாரிகள் எவ்வித அனுமதிகளையும் […]

விமான விபத்து வழக்கு; 228 மனிதக் கொலை குற்றத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டில் 228 உயிர்கள் ஒரே நேரத்தில் மாய்வதற்கு காரணமான ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கில், விமான சேவை நிறுவனமும், ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவனமும் மனிதநேயமற்ற முறையில் அலட்சியமாகச் செயல்பட்டுக் கொலைக் குற்றம் இழைத்துள்ளதாகப் பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரேசில், ரியோ டி ஜெனிரோவிலிருந்து பிரான்ஸ், பாரிஸ் நோக்கிப் பயணித்த ‘AF447’ என்ற பயணிகள் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு, இந்த இரு நிறுவனங்களுமே “முழுமையான மற்றும் […]