கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் ஆதிக்க முயற்சிக்கு எதிராகப் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தங்களின் ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து மீது அதிக செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் செலுத்த முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் தலைநகர் நூக்கில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒன்றுதிரண்டு பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டென்மார்க் நாட்டின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்துக்கு, ட்ரம்பின் சிறப்புத் தூதரான ஜெஃப் லேண்ட்ரி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இப்போராட்டம் வெடித்துள்ளது. “எங்கள் அரசாங்கம் டொனால்ட் […]

கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். 30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை என்று அம்மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (22) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்தத் திட்டம் நிறைவு பெறாத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து […]

இலங்கையருக்குக் கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி என தன்னைக் காட்டிக்கொண்டு, கனடாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்துக்கும் அதிக தொகையை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சுப்பர் மார்க்கெட்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தச் சந்தேக நபர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு 7 […]

முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை – அருண ஜயசேகர

முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் […]

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனுக்கும் வறுமை ஒருபோதும் கல்விக்குத் தடையாக அமையக் கூடாது-வடக்கு மாகாண  ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனுக்கும் வறுமை ஒருபோதும் கல்விக்குத் தடையாக அமையக் கூடாது. வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது. அதனை உறுதிசெய்வது அதிகாரிகளாகிய எமது தலையாய கடமையாகும். இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (22.05.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் சி.மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து […]

கடற்படை ஆக்கிரமித்துள்ள முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்க்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அடுத்தவாரம் மன்னாருக்கு நேரடியாக வருகைதந்து குறித்த காணிவிடுவிப்புத்தொடர்பில் ஆராயப்படுமென பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 22.05.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நாடாளுமன்றுஉறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் குறித்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத்தொடர்பில் கேள்வி […]

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து அவசர நாடாளுமன்ற விவாதத்தைக் கோருகிறது எதிர்க்கட்சி!

இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் உள்நாட்டு நாணய நெருக்கடி (Currency crisis) குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை (Jagath Wickramaratne) இன்று (22) நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து இக் கோரிக்கை முறையாக முன்வைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) சமூக ஊடகப் […]

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க உயர் அதிகாரியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மைத் பிரதி உதவிச் செயலாளர் (Principal Deputy Assistant Secretary) நிக்கோல் சூலிக் (Nicole Chulick) மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிக தூதுவர் (Charge d’Affaires) ஜேன் ஹொவெல் (Jayne Howell) ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) அமைச்சில் வைத்துச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இருதரப்பும் மீள உறுதிப்படுத்தியுள்ளன. […]

“பேட்டரி காரில் கோட்டையை வலம் வந்த முதலமைச்சர் விஜய்!” – பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் திடீர் ஆய்வு!

சென்னை: “சென்னை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலைமைச் செயலக வளாகத்தைப் பேட்டரி காரில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கும் சென்று பார்வையிட்டார்” என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகளின் பேராதரவோடு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய […]

“விசிக ஒன்றும் யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட கொத்தடிமை அல்ல!” – திமுக ஐடி விங்கிற்கு விசிக எக்ஸ் தளத்தில் அனல் பறக்கும் பதிலடி!

சென்னை: “ஜனநாயகம் என்பது ஒற்றைக் கட்சி ஆதிக்கம் அல்ல; கூட்டணிக் கட்சிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே சுரண்ட நினைத்த திமுக-வின் போலி சமூக நீதி அரசியலுக்கு, விசிக பெற்றுள்ள இந்த அதிகாரப் பகிர்வே ஒரு வரலாற்றுப் பாடம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் அனல் பறக்கும் பதிவை வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அமைச்சரவையில் விசிக முறைப்படி இணைந்து, அக்கட்சியின் திண்டிவனம் சட்டமன்ற […]