இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க உயர் அதிகாரியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மைத் பிரதி உதவிச் செயலாளர் (Principal Deputy Assistant Secretary) நிக்கோல் சூலிக் (Nicole Chulick) மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிக தூதுவர் (Charge d’Affaires) ஜேன் ஹொவெல் (Jayne Howell) ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) அமைச்சில் வைத்துச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இருதரப்பும் மீள உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்து தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பைத் தொடர்ந்து இலங்கையுடனான இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ள உயர் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் நிக்கோல் சூலிக் இப் பேச்சுவார்த்தையின் போது வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவினால் அண்மையில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 ‘பெல்’ (Bell) ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படையின் நான்காவது விசேட கப்பல் (Coast Guard Cutter) ஆகியவற்றிற்காக வாஷிங்டன் நிர்வாகத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பல்துறை சார்ந்த இருதரப்பு உறவுகளை முன்னோக்கி நகர்த்துவது குறித்து இப் பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதுடன், ‘டிட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள் எழுச்சி நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கமளித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள கூட்டுறவுத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பங்களிப்பை புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கும் இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்