இலங்கை இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிலையான திட்டம் சர்வஜன அதிகாரத்தில் உள்ளது

இலங்கை இளைஞர்களுக்கு எவ்வித வருத்தமும் ஏற்படாத பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிலையான திட்டம் சர்வஜன அதிகாரத்தில் உள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

“சர்வஜன Youth Vibe 26” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இன்று நாங்கள் உங்களிடம் பேசுவது மற்றொரு அரசியல் கூட்டத்தில் அல்ல. அன்பையும் பாசத்தையும் சுமந்து வந்து, வரலாற்றில் இந்த நாட்டின் அரசியலில் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அது திருத்தப்பட வேண்டும் என்று பலமாக நம்பும் ஒரு குழுவாகவே உங்களிடம் பேசுகிறோம். சர்வஜன இளைஞர் முன்னணி நம்பும் சித்தாந்தம் இதுவே.

இன்று ஒரே ஒரு கருத்தின் அடிப்படையில் நின்று உங்களிடம் பேசுகிறோம். அது என்னவென்றால், எங்கள் இந்த அரசியல் இயக்கத்தில், இந்த சர்வஜன அதிகாரத்தில், நாட்டின் இளைஞர்கள் எந்தவொரு நாளிலும், எந்தவொரு கணத்திலும் கவலையோ, வருத்தமோ அல்லது மனவேதனையோ அடையும் வகையில் எதுவும் நடக்காது என்பதுதான்.

அதேபோல், வரலாற்றில் அரசியல்வாதிகள் பொறுப்பின்றி கூறிய வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏமாற்றமடைந்திருந்தால், மீண்டும் அவ்வாறு ஏமாறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இதுவே நமது செய்தி. நாங்கள் ஒரு நேர்மையான இயக்கம். இந்நாட்டு இளைஞர்களின் உண்மையான இயக்கம்.

வரும் 2029 தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 1,50,000 இளைஞர்கள் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த 1,50,000 இளைஞர்கள் மட்டுமே தீர்மானித்து, இந்நாட்டின் எதிர்காலம் நமது வாக்கின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், பணப்புழக்கம் உள்ள, கனவுகளை நனவாக்கக்கூடிய, சொந்தமாக வீடு, வாகனம் வாங்கக்கூடிய, சொந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய, உலகளவில் வளர்ந்த நாடுகளில் வாழும் இலங்கையராக வாழ விரும்புவதாகவும் கருதிச் செயல்பட்டால், இந்நாட்டின் எதிர்காலம் ஒரே இரவில் மாறிவிடும்.

அதன்பிறகு நீங்கள் வாழப்போவது நமது சாமர கூறியது போல் உண்மையாகவே மகிழ்ச்சியான ஒரு தேசத்தில்தான். அந்த மகிழ்ச்சியான தேசத்தையே நாம் உருவாக்க வேண்டும். அன்பான பிள்ளைகளே, நாட்டின் இளைஞர்களான உங்கள் மீது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் பேசும் இந்த தொழில்முனைவு அரசு என்ற கருத்தாக்கத்தை நாட்டின் ஒவ்வொரு சிறிய குழந்தையின் மனதிலும் பதிய வைக்க நினைப்பது அதனால்தான்.

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி எப்போதும் நேர்மறையாக சிந்திக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுப்பதும் அதற்காகவே. எந்த அரசியல்வாதி உங்கள் மனதில் என்ன குப்பைகளைப் போட்டாலும், உங்கள் மனதையும் மூளையையும் நேர்மறை சிந்தனையால் நிரப்பவே நாங்கள் விரும்புகிறோம். உலகிலுள்ள எந்தவொரு நாட்டையுடனும் போட்டியிடும் ஆற்றலும், அறிவும், நம்பிக்கையும் இந்நாட்டு இளைஞர்களுக்கு உள்ளது என்பதே எமது செய்தியாகும்.

hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை