அறிவியல் ரீதியான பாலியல் கல்வியே இள வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவியை தடுக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்களும், 874 எச்ஐவி தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதுடன், அவ்வாறு எச்ஐவி தொற்றுக்கு அளான 107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாவர் ஆகையால் எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வியை வழங்குவது அவசியம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (15) தேசிய பாலியல் கல்வி வழிகாட்டல்கள் வெளியீட்டு நிகழ்வு சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அமைச்சின் செயலளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் உரையற்றுகையில்,

அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மூன்று வழிகாட்டிப் பிரசுரங்களும் வெறும் ஆவணங்கள் அல்ல; அவை பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே இத்தகைய அறிவியல் அணுகுமுறைகளை ஆரம்பித்துவிட்டன. எமது நாட்டில் இந்த நடவடிக்கைகள் தாமதமடைந்தாலும், தற்போது காத்திரமான கட்டத்தை எட்டியுள்ளோம்.

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 874 எச்ஐவி தொற்றாளர்களும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களுள் 107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கும் மேலதிகமாக பொலிஸ் நிலையங்களில் 10,455 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் இவ்வாறு முறைபாடளிக்கப்படாமல் எத்தனையோ பாலியல் துஷ்பிரியயோகங்கள் சமூகத்தில் இடம்பெற்றுள்ளமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.

பிள்ளைகளின் உடலில் ஏற்படும் ஓர்மோன் மாற்றங்களால் ஏற்படும் சமூகத் தொடர்புகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, அவர்களுக்குச் சரியான விழிப்புணர்வை வழங்க வேண்டும். இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் ஒளிந்துள்ளது. இதற்குச் சமூகம் என்ற ரீதியில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, போதிய விழிப்புணர்வு இல்லாததே சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

உலகெங்கிலும் இதற்குப் பல்வேறு தடைகள் காணப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ரீதியான பதில்கள் உள்ளன. எனவே, வயதுக்கேற்ற பாலியல் கல்வியை நாம் உறுதியுடன் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு தடையை ஏற்படுத்த முன்னிற்பவர்கள் எச்.ஐ.வி பரவல் மற்றும் இளம்வயதுக் கர்ப்பங்களின் சமூகப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதுவொரு ஊடகக் காட்சியோ அல்லது அரசியல் திட்டமோ அல்ல காலங்கடந்தேனும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேசியப் பொறுப்பாகும் என்றார்.

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்