அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சிகள் கண்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆரம்பித்த எந்தவொரு பணியும் வெற்றியளிக்கவில்லை. குரங்குகள் கணக்கெடுப்புக்கு என்ன நடந்தது? வெள்ளைக்காரர்கள் அமைத்துக் கொடுத்த மலையக புகையிரதப் பாதையை ஏழு மாதங்களாக திருத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. வாய் வீரம் பேசும் ஒரு பிரதி அமைச்சர் புத்தாண்டுக்கு முன்னர் அதனைத் திருத்துவதாக கூறுனார். ஆனால் எமக்கு இன்னும் புகையிரத சேவையும் இல்லை.
நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இன்று கடல்கடந்து வாழும் அமைப்புகள்தான் இந்த நாட்டின் அரசியலை வழிநடத்துகின்றன. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இந்த பிரிவினைகளை மறந்துவிட வேண்டும் என்றார்.