பிபிசி ரேடியோ 4-இன் ‘டுடே’ (Today) நிகழ்ச்சியில் பேசிய சாத்தம் ஹவுஸ் (Chatham House) அமைப்பின் அமெரிக்க மற்றும் வட அமெரிக்கத் திட்டப் பணிப்பாளர் லாரல் ராப், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து காணாமல் போன விமானியை மீட்பது ஒரு “முக்கியமான பணி” (Critical mission) என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானியை உயிருடன் பிடிப்பது ஈரானுக்குக் கிடைக்கும் ஒரு “மிகப்பெரிய வெற்றி” (Huge prize) என்றும், இது அவர்களுக்கு மிகவும் வலிமையான ஒரு “பேரம்பேசும் கருவியாக” (Bargaining chip) அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அவர் ஈரானிடம் பிடிபட்டு, அது தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியானால், ஏற்கனவே மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ள இந்தப் போர் குறித்த அமெரிக்கப் பொதுமக்களின் பார்வை இன்னும் மோசமடையக்கூடும். அத்தகைய படங்கள் வெளிவருவது அமெரிக்க நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என ராப் எச்சரித்துள்ளார்.
ஒருவேளை அந்த வீரர் பிடிபட்டால், மோதல்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடையலாம்; ஏனெனில் பிணைக்கைதிகளை வைத்திருப்பது தங்களுக்குச் சாதகமானது என ஈரான் கருதக்கூடும். “தற்போது இந்த இராணுவ நடவடிக்கையின் இலக்குகள் தெளிவாக இல்லை என்பதுடன், நிலைமை மேன்மேலும் சிக்கலாகி வருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.